வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை முயற்சி - பெண் குழந்தை இறந்தே பிறந்தது


வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை முயற்சி - பெண் குழந்தை இறந்தே பிறந்தது
x
தினத்தந்தி 29 Dec 2018 3:45 AM IST (Updated: 29 Dec 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமை காரணமாக, கர்ப்பிணி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே தொடுவாய் கிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி சவுந்தரவள்ளி (வயது 24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது 8 மாத கர்ப்பிணியாக சவுந்தரவள்ளி இருந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி கணவர் உதயகுமார் மற்றும் மாமியார், வரதட்சணை கேட்டு சவுந்தரவள்ளியை திட்டி கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுந்தரவள்ளி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த சவுந்தரவள்ளி சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சவுந்தரவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை இறந்தே பிறந்தது. இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story