வாய்மேடு கடைத்தெருவில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


வாய்மேடு கடைத்தெருவில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 29 Dec 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு கடைத்தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு கடைத்தெருவில் முள்ளியாற்றின் மேல்புறம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உள்ளது. இந்த கூட்டு குடிநீர் வேதாரண்யம் வரை செல்கின்றது. வாய்மேடு கடைத்தெரு வழியாக மருதூர், தகட்டூர், ஆயக்காரன்புலம், வேதாரண்யம், தென்னடார் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வாய்மேடு கடைத்தெருவில் கடந்த 15 நாட்களாக குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வீணாகி ஆறு மற்றும் வாய்க்கால்களிலும் வீணாக கலக்கிறது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் குடிநீர் வெளியேறுவதால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கஜா புயலுக்கு பிறகு வாய்மேடு, வேதாரண்யம் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆதலால் ஒரு சில பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் வீணாகிறது.

எனவே, வாய்மேடு கடைத்தெருவில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story