மாவட்ட செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை; வீடியோ பதிவும் செய்யப்பட்டது + "||" + The physical examination of the young man who was given HIV blood in Madurai Government hospital

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை; வீடியோ பதிவும் செய்யப்பட்டது

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை; வீடியோ பதிவும் செய்யப்பட்டது
எச்.ஐ..வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவின்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த காட்சிகள் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செய்தார். அவர் தானமாக வழங்கிய ரத்தம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை தொடர்ந்து அந்த பெண்ணும் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார்.

இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வாலிபர் கடந்த 26–ந்தேதி கமுதியில் வி‌ஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 30–ந்தேதி காலையில் அந்த வாலிபர் திடீரென இறந்தார்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வேறு மாவட்ட அரசு டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மதுரை பெரிய அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் அருண்குமார், சந்திரசேகர் ஆகியோர் நேற்று காலை மதுரை வந்தனர். அவர்களுடன் மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் ஜூலியானா, சதாசிவம் ஆகியோரும் பிரேத பரிசோதனை செய்ய தயாரானார்கள்.

அந்த சமயத்தில், மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் பெயரை பதிவு செய்வதற்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்றிருந்தார். இதுபோல், வீடியோ பதிவுக்கான பணிகள் முடிவடையாமல் இருந்த காரணத்தால், பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் அந்த டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எச்.ஐ.வி. பாதிப்பால் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மருத்துவத்துறை விதித்துள்ள வழிகாட்டுதலின் படி இதற்கென ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகத்திரை, தனி கையுறை போன்ற உபகரணங்கள் உதவியுடன் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். மாலை 4 மணியளவில் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. இவை அனைத்தும் வீடியோ மூலம் பதிவும் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர், வாலிபரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. குமரியில் கத்தை, கத்தையாக பணம் பறிமுதல்: 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது? லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி விளக்கம்
குமரி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய 2 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வது எப்போது? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
2. திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் யோகா, இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்
யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு தொடக்க விழா திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
3. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு, கண்நோய் சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை
விருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு மற்றும் கண்நோய் சிகிச்சை பிரிவில் டாக்டர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
5. விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் பறிமுதல்
விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.8 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.