இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2255 வேலை வாய்ப்புகள் : நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2255 வேலை வாய்ப்புகள் : நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:28 AM GMT (Updated: 7 Jan 2019 10:28 AM GMT)

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ், இ.எஸ்.ஐ. கழகம் எனப்படும் தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனமும், மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் தோறும் இதன் மருத்துவமனை கிளைகள் உள்ளன. தற்போது இந்த மருத்துவமனைகளில் ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தெலுங்கானா, பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 111 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பணியிடங்கள் விவரத்தையும், பணிப்பிரிவு வாரியான காலியிட விவரத்தையும் முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

கல்வித்தகுதி

பிளஸ்-2 படிப்புடன், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பார்மஸி பட்டப்படிப்பு படித்தவர்கள், அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு

ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை

ஆன்லைன் தேர்வு அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 21-ந் தேதியாகும். தமிழக விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esichennai.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story