அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருமானூர் ஒன்றியம் கீழகுளத்தூர் கிராமத்தில் அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார்.
கீழப்பழுவூர்,
ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி கிளை செயலாளர் சபரிநாதன் வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், அ.தி.மு.க. தொடங்கப்பட்டபின் பல சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற செய்திருக்கிறீர்கள். தற்போது 100 உறுப்பினர்களுக்கு 3 நபர்கள் வீதம் பூத் கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அமோக வாக்கு விகிதத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இதில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அழகுபாண்டியன், முன்னாள் தொகுதி செயலாளர் சேட்டு, மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
இதேபோல் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த திருமழபாடி மற்றும் விளாகம் கிராமத்திலும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் அலெக்சாண்டர் மற்றும் ஊராட்சி செயலாளர் சக்தி வரவேற்றனர். முடிவில் ஊராட்சி செயலாளர்கள் கணேசன், சைவராஜ் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Tags :
Next Story