மாவட்ட செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு + "||" + The fishermen are indefinite strike

ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் தலைவர் சேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெனிட்டோ உள்பட அனைத்து மீனவர்கள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்,

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:–

கடந்த 12–ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகு நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில், அந்த படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்று சிறைவைத்துள்ளனர். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் 2 படகுகள் மூழ்கின. அதில் இருந்த 9 மீனவர்களில் முனியசாமி என்பவர் கடலில் விழுந்து இறந்து விட்டார். மேலும் 8 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இறந்த முனியசாமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முனியசாமியின் உடலை ராமேசுவரம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. கிழக்கு கடற்கரையில் தடைகாலம் இன்று நிறைவடைகிறது: மீன்பிடிக்க தயாராகும் விசைப்படகு மீனவர்கள்
கிழக்கு கடற்கரையில் தடைகாலம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதை தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.
2. தீவுகளை சுற்றிலும் மிதவைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மீனவர்கள் தர்ணா
தீவுகளை சுற்றிலும் மிதவைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
3. 14–ந் தேதியுடன் தடைக்காலம் நிறைவு: மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் வருகிற 14–ந் தேதியுடன் முடிவடைவதால் புதுவையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி தங்களது படகுகளை சீரமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
4. நாகை வேதாரண்யம் கடற்பகுதியில் கடும் சூறைக்காற்று; 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
நாகையில் வேதாரண்யம் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசுவதால் இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
5. கோட்டக்குப்பம் அருகே ஆட்டோ –லாரி மோதல்; மீனவ பெண்கள் 2 பேர் பலி
கோட்டக்குப்பம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மீனவ பெண்கள் 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...