மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது + "||" + From Puducherry to Chennai smuggle 2 arrested for seizing liquor bottles

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் சரக மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில், அந்த காரில் 245 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 30) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் கோட்டக்குப்பம் செட்டிநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ததில், அந்த காரில் 1,044 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர், கோட்டக்குப்பம் ரஹமத் நகரை சேர்ந்த ரஹீம் (33) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, ரஹீமை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு கடத்த இருந்த 1¾ டன் பீடி இலைகள் பறிமுதல் 3 பேர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 1¾ டன் பீடி இலைகளை ராமேசுவரம், மண்டபத்தில் சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
2. நூல் வாங்கி ரூ.15½ லட்சம் மோசடி: கணவர் கைது; மனைவிக்கு வலைவீச்சு
நூல் வாங்கி ரூ.15½ லட்சம் மோசடி செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார். மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு வீடியோ படம் எடுத்து டிக்–டாக் வீடியோ வெளியிட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
4. தென் பெண்ணையாற்றில் இருந்து காரில் மணல் கடத்திய வாலிபர் கைது
பாகூர் அருகே தென் பெண்ணை ஆற்றில் இருந்து காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது. இதுதவிர 312 பவுன் நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.