ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை கரூர் வருகை
ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை கரூர் வருகை கட்சியினர் திரண்டு வர மாவட்ட செயலாளர் வேண்டுகோள்.
கரூர்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், ஈசநத்தம் ஊராட்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு சின்னதாராபுரத்திலும் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதன்பின் மாலை 3.30 மணிக்கு கரூர் வேலம்மாள் லே-அவுட் அருகில் உள்ள மறைந்த நெசவாளரணி தலைவர் பரமத்தி சண்முகம் இல்லத்தில், அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார். மாலை 4 மணிக்கு வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நொய்யல் அம்மையப்பர் திருமண மண்டபம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5,000 வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இதனால் மு.க.ஸ்டாலினை வரவேற்க கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உடன்பிறப்புகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சி சபைக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story