மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு: கருப்பு கொடி ஏந்தி, காளையுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Dismissal of the Jallikattu Contest: A black flag carrying, demonstrated by villagers with bulls

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு: கருப்பு கொடி ஏந்தி, காளையுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு: கருப்பு கொடி ஏந்தி, காளையுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, கீழக்கொளத்தூர் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி, காளையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வந்தனர். இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது, கிராமத்தின் மத்தியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஜல்லிக்கட்டு திடல் அமைத்ததால், பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்று கூறி, ஜல்லிக்கட்டை நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.


ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், இட வசதிகள் அதிகமாக உள்ள இடத்தில் மைதானம் அமைத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் காலம், காலமாக நடுத்தெருவில் தான் ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று கிராமம் முழுவதும் உள்ள வீடுகள், தெருக்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கிராம மக்கள் கருப்பு கொடிகளை கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு, ஜல்லிக்கட்டு காளையுடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தின் நடுவே உள்ள நடுத்தெருவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தரும் வரை இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும், கிராம மக்கள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
சேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
2. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தமிழக அரசு அறிவித்த ரூ.2,000 நிதியை பெறும் பொருட்டு, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
3. பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...