மாவட்ட செய்திகள்

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வைகோ பேச்சு + "||" + Vaiko Talk to hold a referendum in Sri Lanka

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வைகோ பேச்சு

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வைகோ பேச்சு
இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வைகோ பேசினார்.
மலைக்கோட்டை,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழ் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கிறிஸ்தவமும், தமிழும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


கிறிஸ்தவமும் தமிழும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. உலகத்தின் முதல் மொழி தமிழ். தமிழுக்கு மகுடம் சூட்டியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சமணர்கள் வரிசையில் உள்ளவர்களை போன்றவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள். எந்த சமயமாக இருந்தாலும் அது அவரவருக்கு உயர்ந்த சமயமே. சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டிய நேரம் இது. உலகத்தின் முதல் மொழியான தமிழ் மொழி ஐ.நா. சபையின் 6 மொழிகளில் ஒன்றாக இடம்பெற வேண்டாமா?. அது என் காலத்தில் நடைபெறாது. உங்கள் காலத்திலாவது நடக்க வேண்டும். இன்றைய வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்றொரு நாடு கிடையாது. இந்து என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்கள் எதிலும் கிடையாது. உலகில் 125 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லையே.

இலங்கையில் சிங்கள நாடு வேறு, தமிழ் நாடு வேறு, சிங்கள இனம் வேறு, தமிழர் இனம் வேறு. தனித்தனியாக இருந்த இரு நாடுகளை ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து வெளியேறும் போது ஓர் ஒப்பந்தம் போட்டு ஒன்றாக இணைத்து, தமிழ் மக்களை சிங்களர்களுக்கு அடிமையாக்கிவிட்டு சென்று விட்டனர். ஹிட்லர் கூட செய்ய தயங்கிய கொடூரங்களை சிங்கள ராணுவம் அரங்கேற்றியுள்ளது.

ஹேசிமின், சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ வரிசையில் போர் நடத்திய பிரபாகரனும் அழிக்கப்பட்டார். இது ஒரு இனப்படுகொலை. இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு
ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
2. உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் நீதிபதி பேச்சு
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் என்று முதன்மை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முரளீதரன் தெரிவித்தார்.
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் வைகோ பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வருகிற 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடை பெறும் என வைகோ தெரிவித்தார்.
5. ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் தஞ்சையில், பி.ஆர். பாண்டியன் பேச்சு
ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.