மாவட்ட செய்திகள்

ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை + "||" + Near Arani Was a male murdered in rotten condition? Police investigation

ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கண்ணமங்கலம்,

ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் முள்ளண்டிரம் செல்லும் சாலையில் உள்ள பாலத்திற்கு அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.