மாவட்ட செய்திகள்

ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்பேத்கர் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கவில்லை முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றச்சாட்டு + "||" + Who was in power Congress, Nationalist Congress Party Ambedkar Memorial No space left

ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்பேத்கர் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கவில்லை முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றச்சாட்டு

ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்பேத்கர் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கவில்லை முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றச்சாட்டு
ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்பேத்கர் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கவில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
நாக்பூர்,

நாக்பூரில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியின் எஸ்.சி.பிரிவு நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியினர் தங்கள் மூத்த தலைவர்களுக்கு பல்வேறு நினைவிடங்களை அமைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கருக்கு நிலம் ஒதுக்க அவர்கள் தயாராக இல்லை.


காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை சொல்லி ஓட்டுகளை கேட்கின்றனர். ஆனால் அவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் இந்து மில் வளாகத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க ஒரு அங்குல நிலத்தை கூட அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் நான் பிரதமரை நேரில் சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அவரிடம் முறையிட்டேன். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஜவுளித்துறை மந்திரியை அழைத்து மராட்டிய அரசுக்கு 3 நாட்களுக்குள் அந்த நிலத்தை ஒதுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய தலைவலி... பா.ஜனதாவிற்கு தாவ மாநிலங்களவை எம்.பி.க்கள் முடிவு என தகவல்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
2. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும். என்னுடைய தலையீடு இருக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு
மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
4. 2022 உ.பி. தேர்தலுக்காக அடிமட்ட அளவில் பணியாற்ற பிரியங்கா காந்தி திட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி புதிய திட்டத்தை தீட்டியுள்ளார்.
5. முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்
முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...