பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு 2,500 பேர் விண்ணப்பம்


பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு 2,500 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்தத்தால் நிறைய தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்காமல் மூடப்பட்டிருந்தன.

பெரம்பலூர்,

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்தத்தால் நிறைய தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்காமல் மூடப்பட்டிருந்தன. அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட பள்ளி கல்வித்துறை முதன்மை அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை அதிகாரி அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் குவிந்தனர். விடுமுறை நாட்களான நேற்று முன்தினமும், நேற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் பெரம்பலூரில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு சுமார் 2,500 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story