தற்காலிக ஆசிரியர் பணிக்கு 5 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை 5 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கால அவகாசம் வழங்கியது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்படும். இன்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக எந்த இடையூறும் இல்லாமல் பள்ளிகளை திறக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. தற்போது தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்கும் பணி கடந்த 25-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் குவிந்தனர். தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story