கோவிலில் திருடி விட்டு தப்ப முயன்ற வாலிபர் கைது பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


கோவிலில் திருடி விட்டு தப்ப முயன்ற வாலிபர் கைது பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 28 Jan 2019 11:00 PM GMT (Updated: 28 Jan 2019 4:53 PM GMT)

மேலகிருஷ்ணன்புதூர் அருகே கோவிலில் திருடி விட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

மேலகிருஷ்ணன்புதூர் அருகே நயினாபுதூர் பகுதியில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கோவிலில் பூஜைகள் முடிந்ததும், நடையை சாத்தி விட்டு பூசாரி வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் கோவிலின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திடீரென சுவர் ஏறி குதித்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள உண்டியலை உடைத்தார். அப்போது சத்தம் பலமாக உடனே பொதுமக்கள் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்து சுசீந்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் பறக்கை பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் உண்டியலில் திருடிய 300 ரூபாயையும் அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆனந்த் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்டியல் பணத்தை திருடி தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story