பெங்களூரு மெட்ரோ ரெயில்வேயில் வேலை
மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் ஒன்று பெங்களூரு மெட்ரோ.
சுருக்கமாக பி.எம்.ஆர்.சி.எல். என அழைக்கப்படும் இந்த நிறுவனம் தற்போது ஜூனியா் என்ஜினீயா், செக்சன் என்ஜினீயர் மற்றும் மெயின்டனர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 174 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் மெயின்டனர் பணிக்கு 134 இடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 21 இடங்களும், செக்சன் என்ஜினீயர் பணிக்கு 19 இடங்களும் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் செக்சன் என்ஜினீயர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-2-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bmrc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story