அரியலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்,
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான அரியலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோவினர் கடந்த 22-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்தின் முதல் நாளில் ஆர்ப்பாட்டம், அடுத்தடுத்த நாட்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25-ந் தேதி 4-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாக்டோ- ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தவிர மற்றவர்களை விடுவித்தனர். நேற்று முன் தினமும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை அருகில்ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story