ராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த 152 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது


ராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த 152 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2019 4:30 AM IST (Updated: 2 Feb 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

பதுக்கி வைத்திருந்த 152 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் அரிய வகை உயிரினமான கடல் அட்டைகளை பிடித்து, வெளிமாநிலங்கள் மற்றும் இலங்கைக்கு கடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் மண்டபம், வேதாளை, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்காட்டுவலசை, தோப்புவலசை பகுதிகளில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தோப்புவலசை கிராமத்தில் 152 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்ததுடன், அதனை பதுக்கி வைத்திருந்த கோபு(வயது 40) என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story