இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமருவார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு

இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமருவார் என கரூரில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூர்,
கரூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் பூவை.ரமேஷ்பாபு வரவேற்று பேசினார். துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவராகவும், தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் திகழ்வதால் அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தி.மு.க.வில் இணைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். தற்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக தமிழக மக்களின் உரிமையை மீட்க மத்திய அரசினை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பது நமக்கு மிகப்பெரிய பலம் ஆகும். கரூர் பாராளுமன்ற தொகுதியில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றுவதில் திருப்திகரமான செயல்பாடு இல்லை.
தற்போது 21 சட்டமன்ற தொகுதிக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து, அந்த தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இந்த 21 தொகுதிகள் போக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான வழக்கில் இன்னும் 11 தொகுதிகள் காலியாக போகின்றன. இந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் மு.க.ஸ்டாலின் அமருவார். அதிலும் அரவக்குறிச்சி தொகுதியில் தலைமை கழகம் யாரை வேட்பாளராக நியமிக்கிறதோ... அவருடன் ஒருங்கிணைந்து உழைப்போம். கரூர் தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நான் உழைப்பேன். இனி கரூர் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்து காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
விசுவநாதன்-ராமமூர்த்தி போல் செந்தில்பாலாஜி-ராஜேந்திரன் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு தொண்டர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து ஊடகங்களிலும் தி.மு.க. தான் பெருவாரியான வெற்றி பெறும் என கருத்து கணிப்பு கூறுகின்றனர். எனவே அதையெல்லாம் கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். ஒரு புது பார்முலாவை வகுத்துள்ளோம். இதன் மூலம் கரூரில் 4 தொகுதிகளையும் வெல்வோம். ஜெயலலிதா சாவுக்கு தி.மு.க. காரணம் என தம்பிதுரை கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கரப்சன், கமிஷன், கலெக்ஷன் என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அ.தி.மு.க. அரசினை வீட்டுக்கு அனுப்ப 21 தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றிக்கு தொண்டர்கள் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு துணை போகும் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் உரிமையை பறிகொடுத்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, கோயம்பள்ளி அமராவதி ஆற்றுபாலத்திற்கு இணைப்பு சாலை அமைத்து அதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், குளித்தலையில் நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி உபரிநீரை சேமிக்க வேண்டும், நெரூர்-உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
கரூரில் தனியார் விளைநிலங்களை கோவில் சொத்துகள் எனகூறி கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதால் பொதுமக்கள் பலர் பாதிப்படைகின்றனர். எனவே அரசு குழு அமைத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி, பொது குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் குளித்தலை பல்லவிராஜா, அப்பிபாளையம் ஊராட்சி செயலாளர் கே.மாரப்பன், தொழில் அதிபர்கள்ஆசி டெக்ஸ் கோதூர் தியாகராஜன், ஆசி செல்வராஜ், மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் பி.ஏ.இளவரசு, கழக சட்டத்துறை இணைச்செயலாளர் மணிராஜ், கழக கொள்கை பரப்பு துணைசெயலாளர் கரூர் முரளி, கழக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் முனைவர் ஜான் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story