தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-03T01:35:34+05:30)

தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

பெருந்துறை,

பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2018–ஆம் ஆண்டு நடந்த வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 2 வாலிபர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூரை சேர்ந்த பாரத்குமார் (வயது 30), மற்றொருவர் திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள தாளப்பதியை சேர்ந்த இம்ரான் (30) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் ஈரோடு, வெள்ளோடு, சென்னிமலை உள்ளிட்ட பல ஊர்களில் வீடுபுகுந்து நகை, பணம் திருடியதும், அதனால் அவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இந்தநிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் பாரத்குமார், இம்ரான் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பெருந்துறை போலீசார், மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் கலெக்டர் கதிரவன், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.


Next Story