விபத்தில் இறந்துபோன நக்சல் தடுப்புப்பிரிவு போலீஸ்காரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் 21 குண்டுகள் முழங்க மரியாதை


விபத்தில் இறந்துபோன நக்சல் தடுப்புப்பிரிவு போலீஸ்காரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் 21 குண்டுகள் முழங்க மரியாதை
x
தினத்தந்தி 5 Feb 2019 5:30 AM IST (Updated: 5 Feb 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் விபத்தில் இறந்துபோன காரைக்குடியை சேர்ந்த நக்சல் தடுப்புப்பிரிவு போலீஸ்காரரின் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள செஞ்சை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவர் திருப்பூரை தலைமையிடமாக கொண்ட நக்சல் தடுப்பு பிரிவில் போலீசாராக பணியாற்றி வந்தார். சமீபகாலமாக ராஜா மற்றும் அவரது குழு மாவோயிஸ்டுகளை கண்டுபிடித்து கைது செய்வதற்காக, அவர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நீலகிரி மலைப்பகுதியில் தங்களது தீவிர தேடுதல் வேட்டையினை நடத்தி வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த குழுவினர் கூடலூரில் இருந்து நடுவட்டம் என்ற பகுதிக்கு மலைப்பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த வாகனத்தில் சென்ற ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதனையடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்க உறவினர்கள், பொதுமக்கள், போலீசார் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசு மரியாதையுடன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மயானத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்க ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்துபோன ராஜா, தடைகளை தாண்டி செல்வதில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சர்வேஸ் என்ற 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story