ஆலங்குளம் போலீஸ் நிலையம் முன்பு டிக்–டாக்: என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது


ஆலங்குளம் போலீஸ் நிலையம் முன்பு டிக்–டாக்: என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2019 3:00 AM IST (Updated: 6 Feb 2019 8:22 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் போலீஸ் நிலையம் முன்பு டிக்–டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் போலீஸ் நிலையம் முன்பு டிக்–டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயரிங் மாணவர்கள்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள காருகுறிச்சிபுதுக்குடி கிராமத்தை சேர்ந்த ஆத்தியப்பன் மகன் சீத்தாராமன்(வயது28). கூலித்தொழிலாளி.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஆலங்குளம் போலீசாரின் வாகன சோதனையின்போது, மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார், ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். இதை அறிந்த அவரது உறவினர்களான பிராஞ்சேரியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும்17 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

டிக்–டாக் வீடியோ

அப்போது, இந்த 2 பேரும் தனித்தனியாக போலீஸ் நிலையம் முன்பு பிரபல சினிமா பாடல்களுக்கு தகுந்தாற்போல் ஆடியவாறு டிக்–டாக் வீடியோ எடுத்தனர். பின்னர் இந்த டிக்–டாக் பாடல்களை வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து சீத்தாராமன் மற்றும் 2 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை கைது செய்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story