திராவிடர் கழகம் சார்பில் மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு கி.வீரமணி கைது
திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னை,
திராவிடர் கழகம் சார்பில் மனு தர்ம சாஸ்திரத்தின் நகல் எரிப்பு போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மையார் சிலை அருகே நேற்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் அக்கட்சியினர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கி.வீரமணி உள்பட திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் குறித்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மனுதர்மம் சாதியை பாதுகாப்பது. நம்முடைய பெரும்பாலான உழைக்கின்ற மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பெயர் சொல்லி அவர்களை காலங்காலமாக அடக்கி வைத்ததன் விளைவு தான், நம்முடைய மக்கள் இந்த மண்ணுக்குரியவர்களாக, பெரும்பான்மை மக்களாக இருந்தும் கூட அவர்கள் மேலே வர இயலாத ஒரு சூழல் அடக்குமுறை ஏற்பட்டு இருக்கிறது.
மீண்டும் பெரும்பான்மையோடு மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். அரசு ஆட்சிக்கு வரும் என்றால், அவர்கள் ஏற்கனவே சொன்னபடி அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை சொல்கின்ற இன்றைய அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, இந்த மனு தர்மத்தை தான் அரசியல் சட்டமாக வைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களின் குருநாதர் கோல்வால்கரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார். எனவே தான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவும், மனு தர்மம் மனித தர்மத்துக்கு விரோதமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் தான் தமிழகம் முழுவதும் மனு தர்ம எரிப்பு போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
திராவிடர் கழகம் சார்பில் மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் நடத்தி, கி.வீரமணி 54 முறை கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story