மனு தர்ம நகல் எரிப்பு போராட்டம்; திராவிடர் கழகத்தினர் 17 பேர் கைது


மனு தர்ம நகல் எரிப்பு போராட்டம்; திராவிடர் கழகத்தினர் 17 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2019 4:15 AM IST (Updated: 8 Feb 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மனு தர்ம நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.

கரூர்,

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மனு தர்ம நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். இதையடுத்து, பெண்ணடிமைத்தனத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக உள்ள மனு தர்ம புத்தகத்தின் நகலை தீயிட்டு கொளுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து, தண்ணீரை தெளித்து அணைத்தனர். பின்னர் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திராவிடர் கழகத்தினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story