மாவட்ட செய்திகள்

பா.ம.க. பிரமுகர் படுகொலை, நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + PMK. Figurehead Murder, Shiv Sena party demonstrated in Nagam

பா.ம.க. பிரமுகர் படுகொலை, நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க. பிரமுகர் படுகொலை, நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் படுகொலையை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து நாகை அவுரித்திடலில் சிவசேனா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளிப்பாளைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 9 பேரை கைது செய்தனர்.

இதைப்போல நாகை புதிய பஸ் நிலையம் அருகே சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் தங்க.முத்துகிருஷ்ணன் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராமலிங்கம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வேதாரண்யத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து வேதாரண்யத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.