நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடிக்கும் தம்பிதுரை பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடிக்கும் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 9:05 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடிக்கும் என தம்பிதுரை கூறினார்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புன்னம் சத்திரம், புன்னம், பழமாபுரம், உப்புபாளையம், அத்திப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் நேரடியாக சென்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று கொண்டார்.

பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், மத்திய அரசு பொதுமக்களுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி வந்தது. நாடாளுமன்றத்தில் நான் பேசியதின் பேரில் மத்திய அரசு 100 நாட்களுக்குப் பதிலாக வேலைநாட்கள் 150 ஆக அறிவித்தது. அதேபோல், வேலைக்குத் தகுந்தாற்போல், உரிய கூலியை வழங்கவும் உறுதி செய்யப்பட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், புன்னம் கூட்டுறவு வங்கித்தலைவர் சுசீந்திரமூர்த்தி, முன்னாள் புன்னம் ஊராட்சி மன்றதலைவர் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story