மாவட்ட செய்திகள்

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி + "||" + Van Weapon kills 2 young men on motorcycle near Veerapandi

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி
வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
உப்புக்கோட்டை, 

வீரபாண்டி அருகே உள்ள சீப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் பைரவன் (வயது 19). இவர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முப்புலியான் மகன் மாதவன் (19), சின்னமணி மகன் அபிமன்யு (19) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பைரவன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மாதவன், சின்னமணி பின்னால் அமர்ந்திருந்தனர்.

அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் முன்பு சென்றபோது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பைரவன் மற்றும் மாதவன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அபிமன்யு பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வேன் டிரைவரான வருசநாடு தங்கமாள்புரத்தை சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவெண்ணெய்நல்லூர் அருகே, லாரி மீது வேன் மோதல் -டிரைவர் பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
2. பரங்கிப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
பரங்கிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு - 2 பேர் காயம்
வேலை முடிந்து நடந்து சென்ற பெயிண்டர், மோட்டார்சைக்கிள் மோதியதில் இறந்தார். அவருடன் சென்ற அவரது நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
4. மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறினார்.
5. உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் - ஏ.சி. மெக்கானிக் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தார்.