சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரில் அலுமினிய உதிரி பாகங்கள் திருட்டு


சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரில் அலுமினிய உதிரி பாகங்கள் திருட்டு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:00 PM GMT (Updated: 19 Feb 2019 9:37 PM GMT)

சூளகிரி அருகே உஸ்தலபள்ளி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில், இருந்த அலுமினிய உதிரி பாகங்கள் திருட்டு போனது.

சூளகிரி,

சூளகிரி அருகே உஸ்தலபள்ளி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில், இருந்த அலுமினிய உதிரி பாகங்கள் திருட்டு போனது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், மின்சாரத்தை துண்டித்து அலுமினிய உதிரி பாகங்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story