மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மீன்பிடித்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு + "||" + In mid-sea fishing 9 fishermen and 2 boats prison capture

நடுக்கடலில் மீன்பிடித்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு
ராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பார்த்தவுடன், அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். தொடர்ந்து சில விசைப்படகுகளில் இறங்கிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் எறிந்தனர். இதனால் மற்ற படகுகளில் இருந்து மீனவர்கள் உடனடியாக தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

இதற்கிடையே பல விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். மேலும் 2 படகுகளையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்றவர்களா அல்லது மண்டபத்தில் இருந்து சென்றவர்களா? என்பது தெரியவில்லை. மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு வந்தபிறகே அதன் விவரம் தெரியவரும் என்று மீனவர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்
ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவர்களது படகு சேதமானது.
2. ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை
ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஊர் திரும்பினார்கள்.
3. பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்படும் பாலீகிட்ஸ் புழுக்கள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை
பழவேற்காடு ஏரியில் இருந்து பாலீகிட்ஸ் புழுக்களை பிடித்து ஆந்திராவுக்கு கடத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. காசிமேட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்
உச்சிப்புளியில் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் திருமண உதவி தொகை மற்றும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.