திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் 2 பெண்களிடம் விசாரணை.
செம்பட்டு,
சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தது அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சையை சேர்ந்த சாந்தி என்ற பயணியை சோதனை செய்தபோது, அவர் அளவுக்கு அதிகமாக உடலில் அணிந்து வந்த 100 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.இதேபோல, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண், உடலில் அணிந்து வந்த 99 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 2 பெண்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story