தஞ்சையில், ஜெயலலிதா பிறந்தாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்


தஞ்சையில், ஜெயலலிதா பிறந்தாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

தஞ்சாவூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை நேற்று அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் கொண்டாடினர். தஞ்சை தெற்கு மாவட்டம், மாநகரம், நகரம், ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்த விழாவின்போது ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலைகள் வினியோகம் செய்யப்பட்டன. பல இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தஞ்சையில் ஊர்வலம் நடந்தது. தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் உள்ள தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் பரசுராமன் எம்.பி. தலைமையில் மாணவரணி செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக ரெயிலடிக்கு வந்தனர்.

பின்னர் அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், ஒன்றிய செயலாளர்கள் துரை. வீரணன், சாமிவேல், மொத்த கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் பண்டரிநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி, நீலகிரி ஊராட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி அ.தி.மு.க. சார்பில் தஞ்சை மேம்பாலத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் மருத்துவக்கல்லூரி பகுதியில் 1000 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. மருத்துவக்கல்லூரி, டி.பி.எஸ்.நகர், பாலாஜி நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 6 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாணவரணி செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டு உணவு மற்றும் சேலைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் ராஜ மாணிக்கம், வார்டு செயலாளர்கள் மனோகரன், தங்கம், ராஜேஷ்கண்ணா, மகளிரணி மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story