புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 March 2019 10:45 PM GMT (Updated: 1 March 2019 10:45 PM GMT)

புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரத்தநாடு,

திருவோணம் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வேலியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக பட்டுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story