ஓட்டல் உரிமையாளர் கொலை: வழக்கில் தேடப்பட்ட 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்


ஓட்டல் உரிமையாளர் கொலை: வழக்கில் தேடப்பட்ட 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 3 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடந்த ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 3 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.

சிவகங்கை,

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 35). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் காளிதாஸ் கடந்த 28–ந்தேதி சிவகங்கை–தொண்டி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை அருகில் முந்திரி காடு பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் ஆகியோர் உத்தரவின் பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அழகர், சீராளன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட காளிதாஸ் சம்பவத்தன்று அவருடைய உறவினர்களான ஆட்டோ டிரைவர் விஜி என்ற விஜய்பாண்டி, திவான், மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேருடன், விஜய்பாண்டிக்கு சொந்தமான ஆட்டோவில் சென்றது தெரிந்தது.

மேலும் இந்த 3 பேர்களும் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் 3 பேரும் மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இந்நிலையில் விஜய்பாண்டியின் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story