வீட்டில் பதுக்கிய 102 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 102 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் வீட்டில் பதுக்கிய 102 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.

பெருந்துறை,

பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கே.ரவி, எஸ்.செல்வன், சி.மனோகரன் ஆகியோர் பெருந்துறையில் ஈரோடு ரோட்டில் உள்ள தென்றல் நகரில் உள்ள வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் 102 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் ஆகும்.

இதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெருந்துறை பேரூராட்சி குப்பைக்கிடங்கில் போட்டு தீ வைத்து அழித்தனர். 

Next Story