மாவட்ட செய்திகள்

குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் + "||" + The family did not hold the rage, Wife cut by sickle Husband

குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
குடும்ப நடத்த வராததால் மனைவியை அரிவாளால் கணவர் வெட்டினார்.
ராஜாக்காடு,

எர்ணாகுளத்தை அடுத்துள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 40). இவருக்கும், இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு பகுதியை சேர்ந்த ஷிஜா (38) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் எர்ணாகுளத்தில் தங்கியிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதனால் ஷிஜா கோபித்து கொண்டு ராஜாக்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் ஷிபு, தனது மனைவியை குடும்பம் நடத்த அழைப்பதற்காக ராஜாகாடுக்கு வந்தார். பின்னர் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஷிஜா மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஷிபு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷிஜாவை வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிவா, அவருடைய மனைவி ஜெகதம்மா ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திய கணவர் ஐகோர்ட்டில் பரபரப்பு
விவாகரத்து கிடைக்காமல் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. நெல்லை அருகே, டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.85 ஆயிரத்தை கொள்ளை கும்பல் பறித்துச் சென்றது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. கொடுங்கையூரில் வீடு புகுந்து கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு
கொடுங்கையூரில், வீடு புகுந்து கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி - விருத்தாசலத்தில் பரபரப்பு
மனைவியை கடித்த பாம்புடன் தொழிலாளி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. உடன்குடி அருகே, ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - 6 பேருக்கு வலைவீச்சு
உடன்குடி அருகே தொழில் போட்டியில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.