மாவட்ட செய்திகள்

குழித்துறை ஆயர் மீது தாக்குதல்: முளகுமூட்டில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது + "||" + The attack on the Bishop Bishop: Protest rally is taking place today

குழித்துறை ஆயர் மீது தாக்குதல்: முளகுமூட்டில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது

குழித்துறை ஆயர் மீது தாக்குதல்: முளகுமூட்டில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது
குழித்துறை ஆயர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முளகுமூட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
குழித்துறை,

குழித்துறை மறைமாவட்ட ஆயராக இருப்பவர் ஜெரோம் தாஸ். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பட்டுவிளை புனித அந்தோணியார் பங்கை சேர்ந்த சிலர் தாக்கினர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்தநிலையில், ஆயரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் முளகுமூட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து உண்ணாமலைக்கடையில் உள்ள ஆயர் இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் இயேசு ரெத்தினம் கூறியதாவது:–

குழித்துறை மறைமாவட்டம் அப்பட்டுவிளையில் புனித சூசையப்பர், புனித அந்தோணியார் என 2 பங்குகள் உள்ளன. இந்த 2 பங்குகளின் இடையே நீண்ட காலமாக சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. இதனை சுமூகமாக தீர்வுக்கு கொண்டுவர மறைமாவட்ட நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டது. அமைதியான சூழலை உருவாக்க ஆயர் ஜெரோம்தாஸ் தொடர்ந்து பல பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தார்.

இப்படிப்பட்ட நேரத்தில் கடந்த 10–ந் தேதி அப்பட்டுவிளை புனித அந்தோணியார் பங்கை சேர்ந்த ஒரு சாரார் கும்பலாக ஆயர் இல்லம் வந்து பல்வேறு இடையூறுகள் செய்து, ஆயர் ஜெரோம் தாசை தாக்கினர். அதை தடுக்க முயன்ற அருட்பணியாளர் அகஸ்டின், ஆயர் இல்ல காவலாளி மனோகரன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து 17–ந் தேதி (அதாவது இன்று) பிற்பகல் 3 மணிக்கு முளகுமூடு புனித மரியன்னை ஆலய வளாகத்தில் மறைமாவட்டத்தின் அனைத்து பங்கு மக்களும் இணைந்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு  அவர் கூறினார்.

அப்போது கண்டன கூட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் மரிய வின்சென்ட், மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் அருட்பணியாளர் ஷெல்லி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை தாக்கி நகை, செல்போன்கள் பறிப்பு; ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்
போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை வீடு புகுந்து தாக்கி நகை, செல்போன்களை பறித்து சென்றதுடன், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஈரோடு கருங்கல்பாளையம் தம்பதி பரிதாப சாவு; டிரைவர் கைது
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கருங்கல்பாளையம் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தலீபான்கள் மோதலில் 19 பேர் பலி; மற்றொரு தாக்குதலில் 25 பேர் சாவு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொடர்ந்து பாதுகாப்பு படையினரையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
5. ஈராக்கில் வான்தாக்குதலில் 18 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை, அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக் ராணுவம் விரட்டியடித்தது.