காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 March 2019 3:45 AM IST (Updated: 18 March 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதர் உற்சவர் ஏலவார்குழலி அம்பாளுடன் எழுந்தருளினார். அப்போது மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர்கள் தீபாராதனை காட்டினர். தேர் 4 ராஜவீதிகளின் வழியாக வலம் வந்தது.

வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் செயல் அலுவலர் முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Next Story