தபால் நிலையங்களில் செயல்படும் ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதிகாரி தகவல்


தபால் நிலையங்களில் செயல்படும் ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 3:30 AM IST (Updated: 18 March 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தபால் நிலையங்களில் செயல்படும் ஆதார் சேவை மையத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்திற்கான நடப்பு ஆண்டுக்கான வணிக வளர்ச்சி சீராய்வு முகாம் நடந்தது. முகாமிற்கு அஞ்சல்துறை திருச்சி மத்திய மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அம்பேஷ் உபமன்யு தலைமை தாங்கி பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கினார்.

மேலும் வணிக வளர்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தபால் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


பின்னர் அவர் கூறுகையில், திருவாரூர், நாகை தலைமை தபால் நிலையங்கள் மற்றும் காரைக்கால், நன்னிலம், கீழ்வேளூர் உள்பட 31 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் திருச்சி அஞ்சல் உதவி இயக்குனர் குஞ்சிதபாதம், நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story