அரசு சிமெண்டு ஆலையில் தீ விபத்து


அரசு சிமெண்டு ஆலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 7:58 PM GMT)

அரியலூர் அருகே அரசு சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எந்திரப் பிரிவில் நேற்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

வி.கைக்காட்டி,

அரியலூர் அருகே அரசு சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எந்திரப் பிரிவில் நேற்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது சுண்ணாம்பு கற்களை கொண்டு செல்லும் “கன்வேயர் பெல்டில்” எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு, எரிய தொடங்கியது. இதனை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின என்று கூறப்படுகிறது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story