மாவட்ட செய்திகள்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தென்சென்னையில் திருநங்கை சுயேச்சையாக போட்டி + "||" + Makkal Needhi Maiam in Candidates File nomination

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தென்சென்னையில் திருநங்கை சுயேச்சையாக போட்டி

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தென்சென்னையில் திருநங்கை சுயேச்சையாக போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
சென்னை,

மத்தியசென்னை தொகுதி வேட்பாளர் கமீலா தனது கணவர் நாசர், மகன் லுத்புதீன் ஆகியோருடன் வந்து வேட்புமனு அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, ‘வேட்பு மனு பரிசீலனை முடிந்தபிறகு, பிரசாரத்தை தொடங்குவேன். தண்ணீர் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் செய்வேன். ஒவ்வொரு தெருவாரியாகவும் சென்று பிரச்சினைகளை அறிந்து பிரசாரம் மேற்கொள்வேன்’ என்றார்.


வடசென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான ஓய்வு பெற்ற ஐ.ஜி. மவுரியாவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ வடசென்னை மக்களின் பிரச்சினைகளை முன் வைத்து பிரசாரம் செய்வேன். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று மக்கள் நீதி மய்யம் என்பதை எடுத்து செல்வோம்.’ என்றார்.

தென்சென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ரங்கராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு அளிக்கிறார்.

பகுஜன் சமாஜ் கட்சி வடசென்னை வேட்பாளர் எஸ்.ராபர்ட் ஞானசேகர், தென்சென்னை வேட்பாளர் குமார் ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பா.ம.க.வில் இருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா, மயிலாப்பூரை சேர்ந்த திருநங்கை எம்.ராதா, அம்மா மக்கள் தேசிய கட்சி நிறுவனர் குப்பல் ஜி தேவதாஸ் உள்ளிட்டோர் தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்தனர். இதில் குப்பல் ஜி தேவதாஸ் வேட்புமனுவுக்கான ‘டெபாசிட்’ கட்டணத்தை (ரூ.25 ஆயிரம்) சில்லரை நாணயமாக பாத்திரங்களில் எடுத்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் - ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் முடிவு
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் வழங்குவது என ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
3. தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன்
தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
4. ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் -கமல்ஹாசன்
ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
5. மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் - இயக்குநர் அமீர்
மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் என இயக்குநர் அமீர் கூறி உள்ளார். #MakkalNeedhiMaiam