அம்மன் கோவிலில் நகை கொள்ளை


அம்மன் கோவிலில் நகை கொள்ளை
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 28 March 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து நகை, பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி, மேலகாட்டுவிளையில் இசக்கிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் பூஜைகளில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொள்வார்கள். நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் பூசாரி செல்வகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கோவிலுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்வையிட்டார்.

கோவிலுக்குள் பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. அம்மன் அணிந்திருந்த தலா ஒரு கிராம் எடையுள்ள 5 தங்க பொட்டு, பூஜை பாத்திரங்கள், 6 வெண்கல குத்துவிளக்குகளின் மேல்பகுதி போன்றவை கொள்ளை டிக்கப்பட்டிருந் தன.

மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story