திருப்பூரில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது


திருப்பூரில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2019 3:45 AM IST (Updated: 3 April 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் குமார் (28). பனியன் நிறுவன தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த குமார், பெரிச்சிபாளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ரவியிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (24), ராஜா (23), ராகுல் (24) ஆகியோருடன் சேர்ந்து ரவியை சரமாரியாக தாக்கினார்.

மேலும், இந்த கும்பல் கத்தியாலும் குத்தி கொல்ல முயன்றனர். இதில் படுகாயமடைந்த ரவி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததும் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ரவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, குமார் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், ராஜா, ராகுல் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story