சர்க்கரை ஆலையை தனியாரிடம் விற்க முயற்சி: அரசு திட்டங்களை செயல்படுத்தாமல் மூடுவிழா கண்டவர்கள், தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கடும் தாக்கு

சர்க்கரை ஆலையை தனியாரிடம் விற்க முயற்சிக்கிறார்கள். அரசு திட்டங்களை செயல்படுத்தாமல் மூடுவிழா கண்டவர்கள் என்று தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரசாரை ரங்கசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
வில்லியனூர்,
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமிக்கு ஆதரவாக மங்கலம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
கணுவாப்பேட்டை புது நகரில் திறந்த வாகனத்தில் சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு கேட்டு ரங்கசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் 3 ஆண்டுகால ஆட்சியில் புதிதாக எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல், இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மக்களிடம் எப்படி வாக்கு கேட்டு வருகிறார்கள்? புதுவை மாநிலத்தில் யாருக்கு அதிகாரம் என்பது முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியும். ஆனால் திடீரென்று அதிகாரத்தை பெற நீதிமன்றத்தை நாடுவது, கருப்பு சட்டை அணிந்து கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என நாடகமாடுகிறார்.
இதெல்லாம் அவர் தேர்தலுக்காக செய்தார். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே இதை ஏன் செய்யவில்லை. நிர்வாகம் செய்ய தெரியாமல் இருந்து விட்டு ரங்கசாமிதான் துண்டி விடுகிறார் என்று என்மீது பழி சுமத்துகின்றனர். இந்த 3 ஆண்டுகளில் கவர்னரை 2 முறை மட்டுமே நான் சந்தித்துள்ளேன். அப்படி இருக்கும் போது எதையும் நான் எப்படி தடுத்து இருக்க முடியும்.
அரசுத்துறையும், பொதுத்துறையும் நஷ்டத்தில் இயங்க நான்தான் காரணம் என்று எதிர்தரப்பினர் சொல்கிறார்கள். நான் ஆட்சி பொறுப்பில் இருந்த வரை எந்த ஒரு பொதுத்துறை நிறுவனத்தையும் மூடவில்லை. திட்டங்களை புதிதாக கொண்டு வருவதும், அதனை சிறப்பாக செயல்படுத்துவதுமே என்னுடைய கடமை.
அந்த திட்டங்களை மூடுவிழா கண்டது அவர்களுடைய திறமை. உதாரணமாக லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடிவிட்டார்கள். இதனால் எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தனியாரிடம் கொடுக்க முயற்சி நடக்கிறது.
எதிர் தரப்பினர், நமது வேட்பாளர் நாராயணசாமி தனது கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றவே எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகின்றனர். பல்கலைக்கழக அனுமதிபெற, எம்.பி. ஆக வேண்டிய அவசியம் இல்லை. அதிகார சண்டை போடவே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. இதற்குத்தான் நாங்கள் அப்போதே தனி மாநில அந்தஸ்து கேட்டு போராடினோம். இப்போதுள்ள ஆட்சியில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை கூட ஒழுங்காக வழங்க முடியவில்லை. காரணம் கேட்டால், ரேஷன் கடை ஊழியர்களுக்கே சம்பளம் கிடையாது, ரேஷன் கடையே இருக்காது என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Related Tags :
Next Story