மோடி படம் இல்லாமல் பிரசாரம்: என்.ஆர்.காங்., பா.ஜ.க. கூட்டணி தலைவர் யார்? நாராயணசாமி கேள்வி
மோடி படம் இல்லாமல் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். அப்படியானால் என்.ஆர்.காங்., பா.ஜ.க. கூட்டணி தலைவர் யார்? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக உப்பளம் தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கான திட்டங்களை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில் தனி அமைச்சகம் அமைத்து மீனவர்களுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் 5 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் மாதந்தோறும் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமில்லை. இதையெல்லாம் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். ராகுல்காந்தி பிரதமர் ஆனால்தான் மீனவ சமுதாய மக்களுக்கு நல்ல திட்டங்களை தரமுடியும்.
இப்போது மோடி, கிரண்பெடி ஒன்றாக சேர்ந்து இலவச அரிசி, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரவிடமாட்டேன் என்கிறார்கள். இலவச அரிசி போடக்கோரி நானும் அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் கவர்னர் மாளிகை முன்பு 6 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அதன் காரணமாக இப்போது அரிசி வந்துவிட்டது.
ஆனால் தேர்தலை காரணம் காட்டி அதை போட விடவில்லை. ஆனால் தமிழகம், ஆந்திராவில் இலவச அரிசி போடுகிறார்கள். புதுவையில் அரிசி போடுவதற்கு மோடி, கிரண்பெடி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தடையாக உள்ளனர்.
இத்தகைய தடைகளை எல்லாம் மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், சுற்றுலா வளர்ச்சி திட்டம், துறைமுக திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். உப்பளம் தொகுதியில் பிரதமர் மோடியின் படம் இல்லாமல் நோட்டீஸ் அடித்து வாக்கு கேட்கிறார்கள். யாரை பிரதமராக்க வாக்கு கேட்கிறார்கள்? அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.
பிரதமர் மோடி படம் இல்லாமல் ஓட்டு கேட்கும் அவர்களின் கூட்டணி தலைவர் யார்? நாங்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். முடிந்தவரை போராடி திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். உப்பளம் தொகுதியில் கூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 900 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Related Tags :
Next Story