நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு


நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 8:05 PM GMT)

நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு.

ஜெயங்கொண்டம்,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஜெயங்கொண்டம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் அமைந்த கூட்டணி பொருந்தா கூட்டணி. கொள்கையில்லாத, கோட்பாடு இல்லாத, முரண்பாடுகள் நிறைந்து. பேரத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி. அண்மையில் சேலத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசுகையில், 8 வழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒப்புதலோடு நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார். ஆனால் அந்த மேடையில் இருந்த ராமதாஸ் அமைதியாகத்தான் இருந்தார். அவர் ஒரு நாடக அரசியலை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் மக்கள் ஏமாற தயாராக இல்லை. எனக்கெதிராக சாதி, மதம், வன்முறைகளை துருப்புச்சீட்டாக எதிராளிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த தேர்தலை அமைதியாக நடத்த காவல் துறையினர் விழிப்பாக இருந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஜெயங்கொண்டத்தில் பழுப்பு மற்றும் நிலக்கரி திட்டம் தொடர்பாக 13 கிராம மக்கள் நடத்தி வரும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு எனக்கு வாக்களியுங்கள். நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக இந்த திட்டம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பேன். தற்போது இந்த போராட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக தீர்வை காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story