மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி தகவல் + "||" + Mobile phones are not allowed to take mobile phones for polling stations

வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தகவல்.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்களிக்க செல்லும்போது செல்போன் மற்றும் கேமரா போன்ற மின்னணு சாதனைங்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வசதி, பார்வை குறைபாடு உடையவர் வாக்களிக்க தன்னுடன் ஓர் உதவியாளரை அழைத்து செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வாக்களிப்பதில் முன்னுரிமையும், ஆண், பெண் வாக்காளர்களுக்கென தனித்தனி வரிசைகளும் அமைக்கப்படும். இவ்வரிசையில் வரும் வாக்காளர்களில் ஒரு ஆண் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படும்போது, 2 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.


இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கலெக்டர் அண்ணாதுரை தகவல்
தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.
2. மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊரக தொழில்துறை அமைச்சர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமீன் கூறினார்.
3. தோட்டக்கலை பயிர்களில் சொட்டு, தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் தகவல்
தோட்டக்கலை பயிர்களில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.
4. கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
5. நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.