மாவட்ட செய்திகள்

கந்திகுப்பம் அருகேமோட்டார்சைக்கிள்கள் மோதல்; மருந்து கடை ஊழியர் சாவுவாலிபர் படுகாயம் + "||" + Near kanthikuppam Motorcycle collision; The drug shop employee death Wounded child

கந்திகுப்பம் அருகேமோட்டார்சைக்கிள்கள் மோதல்; மருந்து கடை ஊழியர் சாவுவாலிபர் படுகாயம்

கந்திகுப்பம் அருகேமோட்டார்சைக்கிள்கள் மோதல்; மருந்து கடை ஊழியர் சாவுவாலிபர் படுகாயம்
கந்திகுப்பம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் மருந்து கடை ஊழியர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனப்பள்ளி, மேலத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அரவிந்த் (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மகராஜகடை - வரட்டனப்பள்ளி செல்லும் சாலையில் வந்த போது, வரட்டனப்பள்ளி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(28) என்பவரின் மோட்டார்சைக்கிளும், அரவிந்தின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ்குமார் படுகாயம் காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து; 25 மாணவர்கள் காயம்
ராமநத்தம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவர்கள் காயமடைந்தனர்.
2. ஆலங்குளம் அருகே, வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பரிதாப சாவு
ஆலங்குளம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3. அரசு பஸ்சில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் அரசு பஸ்சில் மோதியதில் பரிதாபமாக இறந்தனர்.
4. மோட்டார் சைக்கிள் லாரியில் மோதி வாலிபர் பலி
காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் லாரியில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
5. ஆம்பூர் அருகே, தடுப்பு கம்பி மீது கார் மோதியதில் வாலிபர் சாவு - மற்றொரு விபத்தில் தம்பதி உள்பட 10 பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே தடுப்பு கம்பி மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் தம்பதி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.