அனுமதியின்றி பேரணி சென்ற தே.மு.தி.க. செயலாளர் உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பேரணி சென்ற தே.மு.தி.க. செயலாளர் உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு.
குலசேகரம்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் ஓயும் முன்பு அ.தி.மு.க.–பா.ஜனதா கூட்டணி கட்சியினரின் இரு சக்கர வாகன பேரணி குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் இருந்து புறப்பட்டது. இந்த பேரணி அனுமதியின்றி நடப்பதாக பறக்கும் படை தாசில்தார் தாஜூநிஷா குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் குலசேகரத்தில் இருந்து புறப்பட்ட பேரணி திருவட்டார், ஆற்றூர், பூவங்கோடு, வேர்கிளம்பி வழியாக சுவாமியார் மடம் பகுதிக்கு வந்தது. அங்கு பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அனுமதியின்றி பேரணி சென்றதாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்சன் உள்பட அ.தி.மு.க.–பா.ஜனதா கூட்டணி கட்சியினர் 200 பேர் மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story