மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முன்அறிவிப்பு இல்லாமல் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனை கண்டித்து நேற்று அந்த பகுதி மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் உடனடியாக அந்த பகுதிக்கு புதிய மின்மாற்றியை அமைப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story