கும்பகோணத்தில் தனியார் ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை


கும்பகோணத்தில் தனியார் ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தனியார் ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் எதிரே தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் ஸ்கேன் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கப்படும் ‘ஸ்கேன்’ தொடர்பான குறிப்புகள் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முறையாக அறிக்கை தயார் செய்து பாதுகாக்கப்படவில்லை.

இதுகுறித்து டெல்லியில் உள்ள மத்திய சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளின் ஸ்கேன் பதிவுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரை பூட்டி ‘சீல்’ வைக்க மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் காந்தி தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் சென்டரை பூட்டி ‘சீல்’ வைத்தனர். கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story